போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், வீட்டில் குளித்து முடித்த 50 வயது கணவருக்கு துண்டு கொடுக்காத 45வயது மனைவி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வருவது இயல்பானதே. ஆனால், இது சில சமயங்களில் வன்முறையாக மாறும் சம்பவங்களும் அரங்கேறுவதுண்டு. சிறு காரணத்துக்காக கொலை நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. அதுபோல ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டம் ஹிராபூர் எனும் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் ராஜ்குமார் புஷ்பா, ராஜ்குமாருக்கு 50 வயதா கிறது. புஷ்பாவுக்கு 46 வயதாகிறது. சம்பவத்தன்று ராஜ்குமார் குளியலறைக்கு சென்று குளித்திருக்கிறார். குளித்ததும் உடலை துடைக்க டவல் எடுத்து தரும்படி தனது மனைவியிடம்கேட்டிருக்கிறார். ஆனால், சமையலறையில், பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்த புஷ்பா, சற்று பொறுங்கள், பாத்திரத்தை கழுவியதும் எடுத்து தருகிறேன் என்று கூறினார்.
இதனால் கோபமடைந்த ராஜ்குமார், புஷ்பாவுடன் சண்டை போட்டதுடன், வீட்டில் இருந்த மண்வெட்டியை கொண்டு அடித்துள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயேபுஷ்பா பரிதாபமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவானார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் புஷ்பாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
[youtube-feed feed=1]