ஹசன் நகர்
யார் எதிர்த்துப் பேசினாலும் அவரை பாஜக கொல்லத் துடிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
நேற்று மேற்கு வங்க மாநிலம் ஹசன் நகரில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசி உள்ளார்,
அப்போது மம்தா பானர்ஜி
“பாஜக தனக்கு எதிராகப் பேசுபவர்களைக் கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ விரும்புவதுடன் அவர்களை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்த நினைக்கிறது. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறப்போவதாக உறுதியாக நம்பினால், பிறகு ஏன் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்த வேண்டும்?.
பாஜக தலைவர், ஒருவர் குண்டு வெடிக்கும் என்கிறார். மம்தா பானர்ஜி மீது உங்களுக்குக் கோபம் இருந்தால், என்னைக் கொல்லுங்கள். அபிஷேக் பானர்ஜியை கொல்ல திட்டமிடுகிறீர்கள். நல்லவேளையாக அந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து விட்டோம்.
அந்த நபர் அபிஷேக் பானர்ஜி வீட்டை உளவு பார்த்துள்ளார். அவரை சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்டு, நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அதை நம்பி அபிஷேக் பானர்ஜி நேரம் கொடுத்திருந்தால், அவரை அந்த நபர் கொலை செய்திருக்கக்கூடும்”
என்று பேசி உள்ளார்.