கொல்கத்தா

மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாசாரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில முதல்வராகக் கடந்த 2006 முதல் 2011 வரை பதவி வகித்தவர் புத்ததேவ் பட்டாசாரியா.  இவர் மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.  மறைந்த மேற்கு வங்க முதல்வர் இறப்புக்குப்  பின் புத்ததேவ் பட்டாசாரியா முதல்வராக பதவி ஏற்றார்.

இவருக்கும் தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையில் கடும் அரசியல் பகை இருந்து வந்தது.   சுமார் 75 வயதாகும் புத்ததேவ் பட்டாசாரியா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.   ஆயினும் தொடர்ந்து  மம்தா பானர்ஜியைப் பதவியில் இருந்து இறக்கி மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைப்பேன்  என தெரிவித்து வருகிறார்.

புத்ததேவ் பட்டாசாரியா உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு கொல்கத்தா நகரில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அவரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்த்துள்ளார்   அரசியல்  எதிரியான பட்டாசாரியாவம் மம்தா நேரில் சென்று பார்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.