மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியை ஹீரோவாக வைத்து அமல் நீரட் இயக்கிய ‘பிக் –பி’ என்ற படம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது, நல்ல வரவேற்பு பெற்றது.

இதனை ‘பிலால்’ என்ற பெயரில் இரண்டாம் பாகமாக தயாரிக்க திட்டமிட்டிருந்தனர். கொரோனா காரணமாக அந்தப்படம் தாமதம் ஆனது.

இடைப்பட்ட நேரத்தில் இயக்குநர் அமல் நீரட், மம்முட்டியிடம் இன்னொரு கதை சொன்னார், மம்முட்டிக்கு பிடித்து போயிற்று.

‘பீஷ்ம பர்வம்’ என அந்த படத்துக்கு பெயர் வைத்து ஷுட்டிங்கை கொச்சியில் நேற்று ஆரம்பித்து விட்டார்கள். இந்த படத்துக்காக மம்முட்டி தாடி, ஜடாமுடி வளர்த்து வித்தியாசமான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.

நஸ்ரியா நசீம், ஜோதிர்மயி ஆகியோருடன் நெடுமுடி வேணு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.

இதனிடையே மம்முட்டி- மஞ்சு வாரியார் நடித்துள்ள ‘தி ப்ரீஸ்ட்’ என்ற சினிமா வரும் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

– பா. பாரதி