சசிகுமார், சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்ற படம் டுரிஸ்ட் பேமிலி.

இந்தப்படத்தில் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் இயககிய ‘மம்பட்டியான்’ படத்தின் பாடல் இடம்பெற்றது.

இதையடுத்து அஜித் நடித்த குட் பேட் அக்லி போல் இந்தப்படமும் சர்ச்சையில் சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தியாகராஜன், “என் பட பாடலை TOURIST FAMILY படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு வாழ்த்துகள்.

இதற்காக என்னிடம் யாரும் அனுமதி பெறவில்லை. நிறைய பேர் வழக்கு தொடரச் சொன்னார்கள்.

என் பட பாடல், ஒரு படத்தின் வெற்றிக்கு உதவியதற்கு நான் சந்தோஷப்படுகிறேனே தவிர, வழக்குத் தொடர்ந்து பணம் பார்க்கும் எண்ணம் எனக்கு வரவில்லை. நியாயமாகப் பார்த்தால் நான்தான் அவர்களுக்கு காசு கொடுக்கணும்” என்று கூறியுள்ளார்.