மேற்கு வங்கம்
பாஜக மக்களைக் குடியுரிமை சட்டத்தின் மூலம் பிரிக்க எண்ணுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
நேற்று மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரம்மாண்டமான அந்த பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
“பிற பகுதிகளில் பாஜகவை எதிர்த்து ‘இந்தியா’ கூட்டணி போட்டியிட்டாலும், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ்தான் போட்டியிடும்.
இந்தியக் குடியுரிமையை பொறுத்தவரை, இலவச ரேஷன், ஆதார் அட்டை, பான் அட்டை போன்ற உரிமைகளைப் பெற்றுள்ள நீங்கள் அனைவருமே இந்நாட்டின் குடிமக்கள்தான்.
ஆனால் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் பா.ஜ.க. மக்களைப் பிரிக்க நினைக்கிறது. அவ்வாறு குடியுரிமையை வைத்து பாகுபாடு காட்ட முயல்வது தவறு”
என்று தெரிவித்துள்ளார்.