மேற்கு வங்கம் ; நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி

Must read

ந்திகிராம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி  பெற்றுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி திருணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.  பாஜக இரண்டாம் உள்ளது.  இம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பல பாஜகவினர் முகாமிட்டும் பாஜக வெற்றியை அடையவில்லை.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் திருணாமுல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து பின்னடைவில் இருந்தார்.  கடைசி சுற்றுகளில் அவர் சிறிது சிறிதாக முன்னிலைக்கு வந்தார்.

தற்போது மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை சுமார் 1200 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

More articles

Latest article