கொல்கத்தா

மேற்க் வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக அல்லாத புதிய அரசு அமைந்தால் வக்பு மசோதா ரத்து செய்யப்படும் எனக் கூறி உள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்க முதல்வ்ர் மம்தா பானர்ஜி  இதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மம்தா பானர்ஜி இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்,

”நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜனதா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும். அதற்கான திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம்”.’

என்று கூறியுள்ளார்.