கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நந்திரகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் என்ற மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன் றதேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  சுவேந்து அதிகாரி நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். ஆனால், அவர்  கடந்த ஆண்டு பாஜகவுக்கு தாவிவிட்டார்.  இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், நந்திகிராமில் போட்டியிடப் போவதாக  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி தற்போது பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.  இந்த நிலையில், நந்திகிராமில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு பேசிய மம்தா,  நந்திகிராம் அதிர்ஷ்டமான இடம், உங்கள் புனித இடம். என் ஆத்மா என்னிடம், எனவே, நீங்கள் நந்திகிராமில் இருந்து போராட வேண்டும் என்று கூறுகிறது,  நான் நந்திகிராமிலிருந்து போராடுவேன் என்று கூறினார்.

மேலும்,  நந்திகிராம் எனது மூத்த சகோதரி, பவானிபூர் எனது தங்கை என்று தெரிவித்தவர்,  பவானிபூரிலிருந்து ஒரு வலுவான வேட்பாளரையும் தருவேன். நான் இரு இடங்களிலிருந்தும் போராடலாம் என்று கூறியவர், நந்திகிராமில் எனது வேட்புமனுவை அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று எங்கள் கட்சித் தலைவர் சுப்ரதா பக்ஷியிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்று கூறினார்.

மம்தாவின் அரசியல் வளர்ச்சியின் அஸ்திவாரமாக அமைந்தது, நந்திகிராம் மற்றும் சிங்கூர் நில இயக்கம். கடந்த  2012ம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராமில் விவசாயிகளின் நிலத்திற்காக பிரச்சாரம் செய்த சுவேந்து அதிகாரியின் உதவியுடன் பானர்ஜி அப்போதைய,  இடதுசாரி அரங்கை வெளியேற்றி விட்டு ஆட்சியைப் பிடித்ததார்.

சுவேதி அதிகாரி (முன்னாள் மம்தா கட்சி எம்எல்ஏ, தற்போது பாஜகவில் உள்ளார்)  2007 ஆம் ஆண்டு முதல், நந்திகிராம் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். மாநில போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்தப்பகுதியில், அவரது குடும்பத்தினருக்கு மக்களிடையே தனி செல்வாக்கு உள்ளது.  சுவேது அதிகாரியின் தந்தை சிட்டிங் எம்.பி.யாக உள்ளது.  அவரது தம்பி திபெண்டு, மற்றொரு சகோதரர் காந்தி  ஆகியோர் மாநகராட்சியின் தலைவராக உள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூர் மாவட்டங்களில் அவர்களது கோட்டையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.