கொல்கத்தா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையம் முன்பு காலவரையற்றபோராட்டம் நடத்துவேன் எனக் கூறியுள்ளார்.

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
மம்தா தனது உரையில்.
”தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மற்ற மாநிலங்களிலிருந்து போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.
தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்தவே தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை பாஜக நியமித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு பாஜக வாக்காளர் பட்டியலை எவ்வாறு கையாள்கிறது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
2006 -ல் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு இயக்கத்தின் போது நான் 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் ஒரு போராட்டத்தை தொடங்க முடியும்.
வாக்காளர் பட்டியலை சரிசெய்து போலி வாக்காளர்களை அகற்றக் கோருவதற்காக தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டத்தில் நான் ஈடுபடுவேன்.
எனக் கூறியுள்ளார்.