கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கலவரத்தை தூண்ட அமித்ஷா முயற்சி  செய்து வருகிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக உழைத்து வருகிறது. இரு கட்சியினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிகழ்ந்து வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர், மாநிலத்தில் உள்ள 30 சதவிகி முஸ்லிம்களால் 4 பாகிஸ்தானை உருவாக்குவோம் என்று கூறியது மேலும்  பரபரப்பை ஏற்படுத்தியது.  அதுபோல,முஸ்லிம்களை இணைக்கும் விதமாக மம்தா கூறிவரும் கருத்துக்களும், பாதுகாப்பு படையினர் குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துக்களும் சலசலப்பபை ஏற்படுத்தி வருகின்றன.

தேர்தல் பிரசாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். எதை பேச வேண்டும் என்பதை  அறியாமல், தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக  கொண்டு பெசி வருகின்றனர்.  இந்த நிலையில், பிரசாரம் ஒன்றில் பேசிய மம்தா,  பாஜக தலைவரான, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்தார். அமித்ஷாவை போன்ற  ‘ ஒரு ரவுடி, கலவரக்கார உள்துறை மந்திரியை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அமித்ஷா, ஒரு புலியை விட மிகவும் ஆபத்தானவர். மேற்கு வங்காளத்தில் அவர் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார். அத்துடன் ஒழுக்கக்கேடான செயல்களை செய்வதற்கு போலீஸ்காரர் களையும் தூண்டுகிறார் என்றும், மேற்கு வங்காளத்தை மற்றொரு குஜராத்தாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்று கூறினார்.

அமித்ஷா மீதான மம்தா பானர்ஜியின் இந்த குற்றச்சாட்டு மாநிலத்தில் மேலும்  அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.