விக்னேஷ் சிவன் ‘ரெளடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற பெயரில் உருவாகும் படத்தை வி.விநாயக் இயக்கவுள்ளார்.

நடிகர் கிருஷ்ணகுமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் சே வாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருவருக்கு ஜோடியாக பாடகி ஜோனிதா காந்தி நடிக்கவுள்ளார். டாக்டர் படத்திலிருந்து செல்லம்மா பாடல் வீடியோவில் நடித்திருந்தார் ஜோனிடா காந்தி.

இந்நிலையில் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மால்தி சாஹர் நடிக்கவுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர்களான தீபக் சாஹர், ராகுல் சாஹரின் தங்கையான மால்தி சாஹர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.