டில்லி

ட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் உலகில் உள்ள நாடுகளில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பற்றி ஒரு கணக்கெடுத்துள்ளது.

அந்த நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டது

அந்த அறிக்கையில் காணப்படுவது :

172 நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் இருப்பதாக கண்டறியப் பட்டது.  இதில் இந்தியா 116 ஆம் இடத்தில் உள்ளது

இந்தியாவின் அண்டை நாடுகளில் மூன்று நாடுகள் இந்தியாவை விட முன்னேறிக் காணப்படுகிறது

இலங்கை 61ஆவது இடத்திலும், பூட்டான் 93ஆம் இடத்திலும், மயன்மர் 112ஆவது இடத்திலும் உள்ளன

நேபாளம் 134ஆம் இடத்திலும், பங்களாதேஷ் 134ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 148ஆம் இடத்திலும் வந்து இந்தியாவை விட பின் தங்கியுள்ளது

இந்த எண்ணிக்கையானது இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு பல காரணங்கள் உள்ளன

ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு குழந்தையின் கர்ப்ப காலத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது.

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கர்ப்பிணி மகளிருக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவு/மருந்துகள் கிடைப்பதில்லை.

இது அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கிறது

இது போல் பிறக்கும் குழந்தைகளில் பல நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் இளமைப் பருவத்திலேயே இறந்து விடுகின்றன.

வளர்ந்த குழந்தைகளாலும் மற்ற குழந்தைகளுடன் கல்வி, வேலை ஆகியவற்றில் போட்டியிட முடிவதில்லை.

இந்தியாவில் 10ல் ஒரு குழந்தையே முழுமையான ஊட்டச்சத்துள்ள குழந்தையாக காணப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் 21ல் ஒரு குழந்தை ஐந்து வயதுக்கு முன் இறந்து விடுகிறது. என யூனிசெஃப் நிறுவனம் கூறுகிறது