மாலே
எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டம் என மாலத்தீவு இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாலத்தீவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதை இந்தியா விமர்சித்துள்ளது. இதை அடுத்து பல நாடுகளும் மாலத்தீவு விவகாரங்களில் இந்தியா தலையிட வேண்டும் என கூறி வருகின்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு சமூக ஆர்வலர்களும் அரசியல் தலைவர்களும் இதே கருத்தை கூறி உள்ளனர். இந்நிலையில் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ”எங்கள் நாட்டின் அவசரநிலை பிரகடனத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டத்தை மீறிய செயலாகும். இப்போது மாலத்தீவு மிகவும் பிரச்னைக்குறிய காலகட்டத்தில் உள்ளது. இந்த நேரத்தில் இந்தியா உட்பட எங்கள் நட்புறவு நாடுகள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
இந்த நாடுகளின் தலையிட்டால் மாலத்தீவில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கடும் பாதிப்பு உண்டாகும். இந்தியா உள்ளிட்ட அனைத்துநாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் மாலத்தீவுக்கு எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.