கோலாலம்பூர்:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களுக்கு விடுதலை அளிக்க மலேசிய புதிய பிரதமர் மகாதிர் முகமது முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பரிசான் நேஷனல் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகாதிர் முகமது ஆட்சியை பிடித்து, அரியணை ஏறி உள்ளார்.
இவர் ஏற்கனவே 1981ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் பரிசான் நேஷனல் கட்சியின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதைத்தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வந்த நஜீப் ரசாக் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை தொடர்ந்து, மகாதிர் முகமது மீண்டும், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், முன்னாள் மன்னர் உள்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மகாதிர் முகமது ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை செய்தியாளர்களை சந்தித்த மன்னர் ஐந்தாம் முகமது சுல்தான் உறுதி செய்தார்.