மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்தபோது இந்தி பாடலை பாடி அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மொகமத் மொஹாதிர் மலேசிய பிரதமராக இருந்தபோது அவர் தெரிவித்த சில கருத்துகளால் இந்தியா உடனான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு புதிதாக பிரதமர் பொறுப்பேற்ற அன்வர் இப்ராஹிம் இதை சரிசெய்யும் விதமாகவும் இரு நாட்டு வர்த்தக உறவை மேம்படுத்தவும் ஆகஸ்ட் 19 அன்று இந்தியா வந்தார்.
இந்தியாவில் மூன்று நாட்கள் தங்கியிருந்த அவர் தாஜ்மகால் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அங்கு இசைக்கப்பட்ட இந்தி பாடல்களை ரசித்துக் கேட்ட இப்ராஹிம் ஒரு கட்டத்தில் அவரே எழுந்து பாட்டு பாடினார்.
1964ம் ஆண்டு ராஜ்கபூர் – வைஜெயந்திமாலா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட சங்கம் திரைப்படத்தில் முகேஷ் பாடிய ‘தோஸ்த் தோஸ்த்’ பாடலை அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.