கோலாலம்பூர்: கொரோனா தொற்று என்ற விலங்கினை உடைக்கும் வகையில் நமது கொண்டாட்ட செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றுள்ளார் மலேசிய நாட்டின் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

அதன்பொருட்டு, நாம் ஒருவரையொருவர் சந்திக்கையில், கைகுலுக்காமல், மரியாதையின் அடையாளமாக தலை வணங்கலாம் என்றும் அவர் பேசியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “மலேசியா நாடு வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான நாடு. ஒவ்வொரு ஆண்டும், ஒரு பெரிய குடும்பம் போன்ற வெவ்வேறு விழாக்களை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.

இருப்பினும், இந்த ஆண்டின் சூழல்கள் வேறுபட்டு இருக்கின்றன. எனவே, நமக்கு ஏற்கனவே பரிச்சயமான முறையில் நம்மால் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியாது. கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க வேண்டியதன் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் பார்க்கவோ அல்லது பெரிய கூட்டங்களை நடத்தவோ முடியாது.

இது நாம் விரும்பக்கூடிய ஒன்றல்ல என்றாலும், நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாக்க இதை செய்துதான் ஆக வேண்டியுள்ளது. இந்த சுகாதார நெருக்கடியை நாம் ஒன்றாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்றுள்ளார் அவர்.