விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய  தமிழர்களை மலேசிய அரசு  கைது செய்யப்பட்டுள்ளது,  மேலும், அங்கு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதால், அங்குள்ள தமிழர்கள் நிம்மதி இழந்து வருவதாக கூறப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்ற  இனப்படுகொலைக்கு நீதி கோரியும், படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களின் மரணத்திற்காகவும், சமீபத்தில்  மனித நேய நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற நினைவேந்தல் நிகழ்வுகள் உலகம் முழுவதும் தமிழீள ஆர்வலர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இது தமிழர்களின் உணர்வின் வெளிப்பாடாகும்.

அதுபோலவே மலேசியாவிலும் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. மலேசியாவில் எல் டிடிஇ இல்லாதா நிலையில்தமிழின மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களை தற்போது மலேசிய அரசு கைது செய்துள்ளது.

அவர்கள் மீது புலிகள் அமைப்பை புதுப்பிக்க முயல்வதாக குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. இரு சட்ட மன்ற உறுப்பினர்கள் உட்பட 12 தமிழர்களை SOSMAவின் கீழ் கைது செய்திருப்பது துளியும் ஏற்புடையதாக இல்லை.  இதனால் சமூக வலைத்தளங்களில், புலம்பெயர் தமிழர்களும் மலேசியத் தமிழர்களும் தங்களின் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கூறும் தமிழ் ஆர்வலர்கள்,  ஈழப் போராட்டம் கடந்த 2009ம் ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டது.  தற்போது,  காலத்துக்கு ஒவ்வாத பழையப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு, அவை இப்போது நடந்ததுபோல ஊடகங்களில் திணித்து வருகிறது. இதுபோன்று முட்டாளக்கும் செயலை அரசு நிறுத்த வேண்டும்.

விடுதலை புலிகளால் மலேசியாவில் இது வரை எந்த விபதீரமும் நடக்கவில்லை. நிதி உதவி என்பது மனிதாபிவித அறமேயன்றி தீவிரவாத அமைப்புக்கு அல்ல என்பதை அதிகாரிகள் உணரவேண்டும்.

மலேசிய அரசு பல உலக நாடுகளுக்கு இத்தகு உதவி செய்துள்ளது. இலங்கைக்கும் 3.2 மில்லியன் உதவியை குறிப்பானகக வட மாநில தமிழ் மக்களுக்கு வழங்கியதை நன்றியுடன் பார்க்கிறோம்.

உலகம் முழுதும் 120 மில்லியன் தமிழர்கள் வாழ்ந்தும் இலங்கை சண்டையில் மூன்று லட்சம் தமிழர்களின் மரணத்தை உலகம் வேடிக்கைப் பார்த்து ஊமையானது. 2.5 மில்லியன் தமிழர்கள் வாழும் மலேசியாவும் நடு நிலைக்காத்தது.

உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும், வரலாற்று அறிவின்மையுடன் கூடிய அரசியல்தன புரிதலற்ற போக்கினாலும், கைதான 12 தமிழர்களுக்கும் நம் கருத்துகள் மூலம் பாதகத்தை உண்டு செய்வதாக அமைந்துவிடக்கூடாது என்பதை இங்கு வலியுறுத்திக் கொள்கிறோம்.

சம்பந்தப்பட்ட 12 பேருக்காக அறிவார்ந்தும், சட்டப்படியும் உதவ முன் வந்த அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி கூறி, தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பை வழங்கி நம் உறவுகள் விடுவிக்கப்பட துணை நிற்குமாறு உரிமையுடம் கேட்டுக்கொள்கிறோம்.

எல் டி டி இ இப்போது உலக நாடுகளில் இல்லை. ஐரோப்பிய யூனியனும் எல்டிடி இயை தீவிரவாத இயக்கம் இல்லை என்பதாக அறிவித்து ஆண்டுகள் பல ஆயிற்று. இந்த நிலையில்,  ஏன் பழைய பட்டாசை எடுத்து குப்பையில் போட்டு கொழுத்தி சாயம் பூசுவது ஏன்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.