கொரோனா நெருக்கடியால் திரைத்துறை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மலையாளத் திரைப்படப் பாடகர்கள் சங்கம், இந்த ஊரடங்கால் மேடை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாடல் பதிவு என அனைத்தும் ரத்தாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சக பாடகர்கள், இசைக் கலைஞர்களுக்கு உதவ தமது சமூக வலைதளப் பக்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மே 4 ஆரம்பித்து, தினமும் ஒவ்வொரு பாடகர் என 60 நாட்கள், 60 பாடகர்களின் இசை நிகழ்ச்சியை தனது பக்கத்தில் நேரலையாக ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.
https://www.facebook.com/samamofficial/
ஜூலை 2-ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 8 மணிக்கு ஒரு மணிநேரம் நடக்கும். அந்தந்தப் பாடகர்கள் பாடிய பாடல்களோடு சேர்த்து, ரசிகர்கள் கேட்கும் பாடல்களும் பாடப்படும். இந்த நிகழ்ச்சியை கீழ்கண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்.