கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் இடையே தான் நிஜமான போட்டி நிலவுகிறது.
கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
சபரிமலை விவகாரத்தில் ஆளும் கூட்டணி அரசு நடந்து கொண்ட விதம், அங்குள்ள இந்துக்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளது.
இதனை பயன்படுத்தி கூடுதலாக ஒரிரு இடங்களை அறுவடை செய்யலாம் என பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் அவசர அவசரமாக தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
மலையாள சினிமாவுக்கு மொத்தமாக 11 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
மோகன்லால் நடித்த ‘மரக்கார்- அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்துக்கு மூன்று விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவை பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு உதவலாம் என அந்த கட்சியினர் நம்பிக்கையோடு உள்ளனர்.
– பா. பாரதி