லிலோங்வி:  பிளான்டைர், மலாவி – மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (வய 51)  மற்றும் ஒன்பது பேர் அவர்கள் பயணம் செய்த சிறிய இராணுவ விமானம் நாட்டின் வடக்கில் உள்ள மலைப் பகுதியில் மோசமான வானிலையில் விபத்துக்குள்ளானதில் இறந்ததாக ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானது. விமானம் விபத்தில் சிக்கி, துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவி நாட்டின் துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா இருந்து வந்தார். அவர்  ஜூன் 10ந்தேதி அன்று  9 பேருடன் ராணுவ விமானம் மூலம் சென்றார். அவர் பயணித்த விமானம் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காமல்  மாயமானது. விமான கண்காணிப்பு ரேடாரிலிருந்து விலகியது. மாயமான விமானத்தில் ஏழு பயணிகளும், மூன்று ராணுவ வீரர்களும் இருந்தனர். இந்த விமானம் இது டோர்னியர் 228 வகை இரட்டை ப்ரொப்பல்லர் விமானம் ஆகும்.

இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாயமான   விமானத்தை தேட அந்நாட்டு அதிபர் லாசரஸ் சக்வெரா உத்தரவிட்டார். இதையடுத்து சுமார் 600 பணியாளர்கள் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  விசாரணையில், அந்த விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.  முசுசு (Mzuzu) அருகே விபயா (Viphya) மலைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருப்பது தெரிய வந்தது. விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து மீட்பு படையினர், விபத்தில் இறந்த சவுலோஸ் சிலிமா (வய 51)  உள்பட 9 பேரின் உடல்களை மீட்டனர்.