கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பது ஒரு பக்கம் இருக்க , நோய் , வறுமை , தற்கொலை என பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன .
இந்நிலையில் கோலிவுட்டின் திரையுலகில் பிரபல ஒப்பனைக் கலைஞரான மேக்கப் பாபு நேற்று (04/09/2020) மரணமடைந்தார்.
இதற்கு பலர் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில்,
The 1st ever make up man to put make up for me b4 I started as an actor #MakeupBabu anna…
One of the best make up artist in the ad-film industry…Unseen hero behind d camera💔
Worked with him 3weeks back also for an ad shoot😔
Life is unpredictable #RIP pic.twitter.com/7ueOB9PN9k— Shanthnu (@imKBRshanthnu) September 4, 2020
நடிகராகவதற்கு முன்பு இருந்தே என் முதல் மேக்கப் மேன் மேக்கப் பாபு அண்ணா தான் .இரண்டு வாரங்களுக்கு முன்னாடி கூட அவருடன் ஒரு விளம்பர படத்துக்காக பணிபுரிந்தேன். வாழ்க்கை கணிக்க முடியாததாக இருக்கிறது என்று வேதனை தெரிவித்தார்.
அதே போல் நடிகை நதியா, தனது ட்விட்டர் பக்கத்தில்
https://twitter.com/ActressNadiya/status/1302093330642210816
என்னுடைய மேக்கப் கலைஞர் மற்றும் சிறந்த உள்ளம் கொண்டவர். என்னுடன் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி மற்றும் நிறைய விளம்பரப்படங்களில் பணிபுரிந்துள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார்.