மும்பை:

மோடி அரசின், மேக் இன் இந்தியா இன்னும் போதுமான வேலைகளை உருவாக்கவில்லை, அந்த திட்டம் தோல்வி அடைந்து இருப்பதாக எல் அண்ட் டி நிறுவனத் தலைவர் ஏ.எம்.நாயக் குற்றம் சாட்டி உள்ளார். இந்தியா பொருட்களுக்கு பதிலாக வேலைகளை ஏற்றுமதி செய்கிறது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

மோடி இரண்டாவது முறை பதவி ஏற்ற நிலையிலும், நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து கொண்டே வருகிறது. வேலைவாய்ப்பு இன்மை குறைந்து வருகிறது. ஆட்டோமொபைல் துறை  மூழ்கும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக  லட்சக்கணக்கானோர் வேலைகளை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா முன்முயற்சி போதுமான வேலை களை உருவாக்கத் தவறிவிட்டது, ஏனெனில் துறைகளில் உள்ள நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்திக்கு பதிலாக பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புகின்றன என்று லார்சன் மற்றும் டூப்ரோ லிமிடெட் தலைவரும், பொது-தனியார் கூட்டாண்மை தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (என்.எஸ்.டி.சி) தலைவராக இருப்பவருமான நாயக் மத்தியஅரசை கடுமையாக சாடி உள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாயக்,  “பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வ ராக இருந்தபோது, மாநிலத்தில் தொழில்துறைக்கு உகந்த சூழலை உருவாக்கி  பெரிய முதலீடு களை ஈர்த்து பெருமை சேர்த்தார் என்பதை நினைவுபடுத்தியவர், அதுபோல, சூழலை தேசிய மட்டத்தில் உருவாக்கி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.

“பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம், நிறையப் பற்றி பேசப்படுகிறது, ஆனால், அதில் நாம்  இன்னும் நிறைய செய்ய வேண்டும். தற்போது, நாம்  பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக வேலைகளை ஏற்றுமதி செய்கிறோம், என்று கூறியுள்ள நாயக், இதற்கான காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும் என்றும், பெரும்பாலான நிறுவனங்கள் இங்கே உற்பத்தி செய்வதை விட இறக்குமதி செய்யவே  ஆர்வமாக உள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், தொழில்நிறுவனங்கள் அதிக அளவிலான  இறக்குமதிக்கான மற்றொரு காரணம், இந்திய நிறுவனங்களுக்கு போதுமான நிதி ஆதாரங்கள்  இல்லை என்பதை சுட்டிக் காட்டிய நாயக்,  “நாங்கள் இறக்குமதியை அனுமதிக்கிறோம், ஏனெனில், அது பெரும்பாலும் கடன் வசதியுடன் வருகிறது” என்று தெரிவித்தார்.

உலகின் அதிக அளவிலான இளைஞர்கள் வசிக்கும் நாடு இந்தியா. ஆனால், அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை, ஒவ்வொரு ஆண்டும் வேலை சந்தையில் நுழையும் 10 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான ஆய்வு அறிக்கையில்,  நாடு அதன் மக்கள் தொகைக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று தெரிவிக்கிறது என்பதையும் நினைவு கூர்ந்தார்.

பலவீனமான நுகர்வு மற்றும் தனியார் முதலீட்டின் பின்னணியில் கடந்த  மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 5.8% ஆகக் குறைந்துள்ளது. இது வளர்ச்சி, சில மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டில் மேலும் பலவீனமடையக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ள நாயக்,  வேலைவாய்ப்பு உருவாக்கம், குறிப்பாக உற்பத்தித் துறையில் தேவையான கவனம் செலுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தற்போது, நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால், சீனாவுக்கு சமமான பொருளாதாரம் நமக்கும் தேவை என்று வலியுறுத்தியவர், , சீனாவில் பொருளாதாரம் வளர்ந்து வருவதுபோல, அதாவது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஏறக்குறைய 12-13% வளர்ச்சி இருப்பதாக கூறியவர், இந்தியாவிலும் பொருளாதாரம்  வளரவில்லையெனில், வேலைகள் பற்றாக்குறை தொடர்ந்து கொண்டே இருக்கும்; மத்திய மாநில அரசுகள் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

“இந்த இடைவெளியைக் குறைக்க தேவையான வேகத்தில் எங்களால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை,” என்றும் நாயக் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் வர்த்தக யுத்தத்தை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்த நாயக்,  வியட்நாம், தாய்லாந்து உட்பட பல நாடுகள், அமெரிக்க  அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு உற்பத்தி செய்வதற்காக பன்முகப்படுத்தப்பட்டதன் மூலம் பயனடைந்துள்ள நிலையில், இந்தியா அதைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்று  குற்றம் சாட்டியவர்,   “இந்தியா என்ன செய்தது? என்று கேள்வி விடுத்தார்.

நான் இதைச் செயல்படுத்தினால், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதி சார்ந்த வணிகத்தை இந்தியாவுக்கு எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்து நான் ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியிருப்பேன் என்றும் தெரிவித்தார்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின்  கீழ் 2008 இல் அமைக்கப்பட்ட என்.எஸ்.டி.சி, அரசாங்கத்தின் குறுகிய கால திறன் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும்,  NSDC இன் 2018 ஆண்டு அறிக்கையின்படி, அது 40 திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் 11,035 பயிற்சி மையங்கள் மூலம் அந்த ஆண்டில் 3.98 மில்லியன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தது உள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால்,  என்.எஸ்.டி.சி திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் சுமார் 12% பேருக்கு மட்டுமே வேலை கிடைத்து உள்ளது என்பது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

என்.எஸ்.டி.சி தலைவராக, தான்  தற்போது,  அமைப்பில் பயிற்சியாளர்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும், “சிறிய நகரங்களில், நிலைமை மிகவும் பரிதாபகரமானது  என்றவர், அங்கு  ஆசிரியர்கள் மிகவும் சராசரியாக இருக்கிறார்கள். பயிற்சிக்கு எங்களுக்கு உயர்தர ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவை,” என்றும் அவர் கூறினார்.

எல் அண்ட் டி மும்பைக்கு அருகிலுள்ள மத் தீவில் ஒரு பயிற்சி நிறுவனத்தையும் அமைக்கிறது. அங்கு இது வழங்கும் என்.எஸ்.டி.சி அமைப்பில் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகளுடன் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும்,  இது  இது ஏப்ரல் 1 முதல் செயல்பட்டு ஐந்து வர்த்தகங்களுடன் தொடங்கும் என்று தெரிவித்தவர்,   “இந்த சோதனை வெற்றிகரமாக இருந்தால், இதுபோன்ற மேலும் மையங்களை நாங்கள் திறப்போம் என்றும் தெரிவித்து உள்ளார்.

மோடி தலைமையிலான அரசு மீதான எல்அண்ட்டி தலைவரின் நேரடி குற்றச்சாட்டு தொழிலதிபர் களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.