டில்லி:

க்களிடையே அச்சத்தை உருவாக்கி வாக்கு பெற பாஜக தலைமை முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜக தற்போது அறிவித்துள்ள  வேட்பாளர் பட்டியலில்  சுமார் 25 சதவிகிதம் பேர், அதாவது 35 வேட்பாளர்கள் கிரிமினல்கள் என்ற பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். பாஜக அறிவித்து வரும் வேட்பாளர்களில் பலர் கிரிமினல்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாநிலங்கள் தோறும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது. நேற்று தமிழகம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்த 184 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை  வெளியிட்டது.

இதில் என்ன விசேஷம் என்றால், இந்த 184 பேரில் 35 பேர் மீது பல்வேறு வகையான கிரிமினல் குற்றச்சாட்டுக்களை நிலுவையில் உள்ளது.  இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

நிலையான ஆட்சி, நிம்மதியான ஆட்சி என்று கூறி வரும் பாஜக, ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றை அறிமுகப்படுத்தி மக்களை நிம்மதியிழக்க செய்துள்ள நிலையில், தற்போது கிரிமினல் வேட்பாளர்களை களமிறிக்கி இருப்பது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைமை வெளியிட்டுள்ள 184 பேர் கொண்ட பட்டியலில் 78 பேர் கடந்த தேர்தலிலும் போட்டியிட்டவர்கள். அத்துடன்  18 பேர் பெண் வேட்பாளர்கள். பாஜக தலைமை தற்போது போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ள 78 பேரில் 35 பேர் கிரிமினல்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. கிரிமினல்கள் என்று தெரிந்தே பாஜக தலைமை அவர்களை மீண்டும் களத்தில் இறக்கி உள்ளது.

இவர்களின் தகவல்கள் குறித்து தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து இந்த பகீர் தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்த கிரிமினல் பட்டிலில் முதலிடம் பிடித்திருப்பது சர்ச்சைக்குரிய வகையில் பேசி, அவ்வப்போது  பிரச்சினை உருவாக்கி வரும், மகாராஷ்ட்ராவின் சந்திரபூர் தொகுதி வேட்பாளர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர். இவர் மீது  11 குற்ற வழக்குகள் உள்ளன.

அவரைத்தொடர்ந்து,  ஒடிசா மாநிலத்தை சேர்ந்த  பிரதாப் சாரங்கி. இவர்மீது 10 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும், இவர்களுக்கிடையே  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீதும்  5 குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கிரிமினல்களுக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு கொடுத்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வாக்கை பெற பாஜக முயல்கிறதா என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.