சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், ரூ.14 கோடி மதிப்புள்ள நிதி முறைகேடு நடந்துள்ளதும்,   வேலை செய்யாதவர்களுக்கு பணம் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர் இ.ஜி.எஸ்) கீழ்  மத்தியஅரசு தர வேண்டிய நிதியை தர வில்லை என குற்றம் சாட்டி வரும் நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியில் பெரும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக   சமூக தணிக்கை கண்டறிந்துள்ளது.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மிகப்பெரிய ஊழல்  நடைபெற்று உள்ளதாகவும்,  MGNREGA திட்டத்தில் தமிழ்நாட்டில் ரூ.14 லட்சம் மதிப்பிலான முறைகேடுகள் நடந்துள்ளதாக சமூக தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. வேலைவாய்ப்பை தரும் இந்த திட்டத்தின்கீழ், குளங்களை தூர்வாருவது, கால்வாய்களை பராமரிப்பது, அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என்று ஏராளமான அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் 13.13 கோடி பயனாளிகள் உள்ளனர்.. தமிழ்நாட்டிலும் இந்த நடைமுறை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.. தமிழகத்தில் மட்டும் 89 லட்சத்து 3 ஆயிரத்து 310 பயனாளிகள் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பங்கேற்பை எளிதாக்க குழந்தைகள் காப்பகத்திற்கான ஏற்பாடு, இருப்பிடம் அருகிலேயே பணி என்பது உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இந்த திட்டத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக சமூக தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.  சமூக தணிக்கை என்பது,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட தணிக்கை விதிகள் 2011-ன் கீழ் சட்டப்பூர்வத் தேவையாக. இத்திட்டத்தின் கீழ் பொறுப்புணர்வை உறுதி செய்வதையும் பணியின் தரத்தை மேம்படுத்துவதையும்சமூக தணிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி,  தமிழ்நாட்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பணிகள், நிதிகள் குறித்து  மாநிலத்தில் உள்ள  12,525 கிராம பஞ்சாயத்துகளில் 11,709 கிராம பஞ்சாயத்து களில் நிதி முறைகேடு, செயல்முறை மீறல்கள் மற்றும் தொழிலாளர்களின் குறைகள் குறித்து தணிக்கை நடத்தப்பட்டுள்ளது. இதில் நிதி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்கு முறையான பதில் இல்லை என்றும்,  தணிக்கை துறையினர் எழுப்பியகேள்விக்கு  பதில் மற்றும் நடவடிக்கைகள் மோசமாக உள்ளன. இதுதொடர்பாக  பதிவான 30,068 வழக்குகளில் 6,301 வழக்குகளில் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில்,  ரூ.14 கோடி மதிப்புள்ள நிதி முறைகேடுகள் மற்றும் விலகல்கள் தொடர்பான 78,700 க்கும் மேற்பட்ட முரண்பாடுகள் கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.  இதில் ரூ.1.89 கோடி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யாத தனிநபர்கள் அல்லது ஒரு குழுவுக்கு பணம் வழங்கப்பட்ட 17,128 வழக்குகளை தணிக்கை வெளிப்படுத்தியது. 17,000 வழக்குகளில் வேவை செய்யாத  நபர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

தணிக்கை  கண்டுபிடித்து தெரிவித்துள்ள முறைகேடு மீதான குற்றச்சாட்டிற்கு அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை என்றும் , நிதி மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

“ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது எஃப் ஐ.ஆர் அல்லது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என்று  தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பஞ்சாயத்தில் 37 பேருக்கு ரூ.8.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது

விருதுநகர் புதுக்கோட்டை விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல்,14,657 நிகழ்வுகளில் நிலுவைத் தொகையை விட அதிகமாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர 15,796 அறிக்கைகள் பணியிடங்களில் பதிவு செய்யப்பட்ட அளவீடுகளுக்கும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட மதிப்புகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க முரண்பாடு களை எடுத்துக்காட்டின.

முறைடுகள் தொடர்பாக,   திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு ஊழியரையும், திருநெல்வேலியில் 4 பேரும், தென்காசியில் ஒருவரும், தர்மபுரியில் ஒருவரும் என 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மட்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தியதில் அடையாளம் காணப்பட்ட 5,314 முறைகேடு வழக்குகளில், 1,146 பிரச்சினைகள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன “அதிகாரிகள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறிவிட்டனர்.

இதுபோன்ற சம்பவங்கள், இந்த திட்டத்தில் மாபெரும்  நிதி மோசடிக்கு வழிவகுக்கிறது. இதுவரை 93,29 சதவீத பஞ்சாயத்துகளில் தணிக்கை முடிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும். இந்த திட்டத்தில்,   30,068 – நிதி முறைகேடு வழக்குகள்,  17,128 – வேலை செய்யாதவர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள்,  14,657 – அதிக ஊதியம் வழங்கப்பட்ட வழக்குகள், 15,251 – நிதி விலகல் சிக்கல்கள், 21,868– செயல்முறை மீறல் சிக்கல்கள், 11,597 — ஏனைய குறைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்கள் டிடிநெக்ஸ்ட்-யில் இருந்து பெறப்பட்டது என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்