தேனி: அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
அருணாசலபிரதேசத்தில் விமானப்படையைச் சேர்ந்த சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், அதில் பயணம் செய்த மேஜர் ஜெயந்த், லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் தலைநகர் திசாப்பூரில் உள்ள இராணுவ மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் விமானப்படை விமானம் மூலம் அவர்து சொந்த ஊரான (லெட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் ஐதராபாத் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து தெலுங்கானவில் உள்ள ஏடாட்ரி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது.
இதேபோல் மேஜர் ஜெயந்தின் உடல் அதே விமானம் மூலம் நேற்று இரவு மதுரை கொண்டுவரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் , மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் யாதவ், மதுரை மாநகர் வடக்கு காவல் துணை ஆணையர் அரவிந்தன், மதுரை விமான நிலைய இயக்குநர் கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன். மற்றும் முக்கிய பிரமுகர்கள் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மீண்டும் இன்று மதுரையிலிருந்து புறப்பட்டு பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடத்து, அவரது உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி சடங்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.