மும்பை:
சிந்தியா ஹவுஸ் என்று அழைக்கப்படும் 6 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கிய 8 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, . கிரேன்கள் மூலமாக நீரை இறைத்துத் தீயைக் கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக சேதம் தவிர்க்கப்பட்டது.
இன்று அதிகாலை 4.55 மணி அளவில் சிந்தியா ஹவுஸ் கட்டித்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பகிறது. இந்த கட்டிடத்தில், வருமான வரித்துறை அலுவலகமும் கடன் மீட்பு தீர்ப்பாய அலுவலகமும் இயங்கி வந்தன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 12 தீயணைப்பு வண்டிகள் மற்றும் கிரேன்களுடன் வந்து பல மணி நேரமாக கடுமையாக போராடி தீ அணைத்தனர்.
இந்த கட்டித்திற்குள் 8 பேர் சிக்கிக்கொண்டதாக கூறப்பட்டது. அவர்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தீ காரணமாக ஏற்பட்ட புகையில் சிக்கி ஒரு தீயணைப்பு வீரர் உள்பட 7 பேர் மயக்கம் அடைந்தாகவும் கூறப்படுகிறது.
இந்த பயங்கர தீ விபத்தில், ஆவணங்கள் எதுவும் சேதம் அடையவில்லை என்று வருமான வரி அதிகாரி தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நாசவேலை காரணமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.