
பிரபல கார் நிறுவனங்களான போர்டு கார் நிறுவனமும், மகிந்திரா கார் நிறுவனமும், எலக்ட்ரிக் கார் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இதன் படி எக்ஸ்.யூ.வி. மற்றும் சிறிய ரக மின்சார வாகனங்களை தயாரிக்க உள்ளது.
இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களாக மாற்றப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்நிலையில் சர்வதேச கார் நிறுவனங்கள் இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மின்சார கார்களை தயாரிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
இந்நிலையில் மின்சாரத்தால் இயங்கும் நடுத்தர வகை எஸ்.யூ.வி. வாகனம் மற்றும் சிறிய ரக வாகனங்களை வாகனத்தை இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் ஃபோர்டு நிறுவனத்துக்கும் மகிந்திரா நிறுவனத்துக்கும் இடையே நேற்று கையெழுத்தானது.
இரண்டு நிறுவனங்களும் வாகனங்களை இணைந்து தயாரித்தாலும், அவரவர் பிராண்ட் பெயர்களில் வேறு வேறு சந்தைகளில் விற்பனை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா, இரு நிறுவனங்களுக்கு இடையே தொழில் தேவைகள் மற்றும் பரஸ்பர வலிமைகளை நிலைநிறுத்துவதில் கூட்டு வளர்ச்சிப் பகுதிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்த ஒத்துழைப்பு மற்றும் அது கொண்டுவரும் சாத்தியமான வாய்ப்புகள் மூலம் வெளிப்படுத்தப்படும் என்றும், இந்த உடன்பாடு காரணமாக நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம் என்றும் கூறி உள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு இரு நிறுவனங்களுக்கும் இடையே மின்சார வாகனங்கள் தயாரிப்பது தொடர்பாக 3 ஆண்டு ஒப்பந்தம் போடப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]