கொழும்பு

டுத்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டியிடுகிறார்.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவியில் இருந்து அகற்றிய மக்கள் எழுச்சிக்குப் பின்னர், இலங்கையில் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தல், கடுமையான போட்டியுடன் நான்கு முனைப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரை எதிர்கொள்வார்.

அடுத்த மாதம் 21ஆம் தேதி நடக்க உள்ள இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான 38 வயதான நமல் ராஜபக்ச போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

மகிந்தாவும், கோத்தபயவும் தேர்தலில் போட்டியிட விரும்பினாலும், கடந்த கால அனுபவங்களால் அவர்களுக்கு ஆதரவு கிடைக்காது என்பதால் நமல் ராஜபக்சவை களமிறக்க ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனதாக கூறப்படுகிறது.