பாகுபலி இரண்டாம் பாகத்தை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் அக்டோபர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
ஜுனியர் என்.டி.ஆர்.- ராம்சரண் நடித்துள்ள இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இப்போது எடுக்கப்படுகிறது.
இந்த படத்தை முடித்து விட்டு தெலுங்கு இளம் ஹீரோ மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க ராஜமவுலி ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆப்பிரிக்க காடுகளில் நடப்பது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
விஜேயேந்திர பிரசாத் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளார். கதை ஹீரோவுக்கும், இயக்குநருக்கும் பிடித்துப்போனது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பெரும் பொருட்செலவில் இந்த படம் தயாராகிறது.
ஆர்.ஆர்.ஆர். ரீலீஸ் ஆனதும் படக்குழு ஆப்பிரிக்கா பறக்க உள்ளது.
– பா. பாரதி