வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை இன வெறியர்களால் சேதமாக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உள்ளது. இதன் வளாகத்தில் மகாத்மா காந்தி முழுஉருவ நிலை வைக்கப்பட்டிருந்தது. தற்போது, அங்கு இன வன்முறை வெடித்துள்ளதால், வன்முறையாளர் களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீசார் ஒருவரால் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிறவெறியைக் கண்டித்து அமெரிக்கா முழுவதும் கருப்பின மக்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை வன்முறையாளர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக காந்தி சிலை துணியால் மூடப்பட்டுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கருப்பின மக்களுக்கு ஆதரவாக போராடிவர் மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இன்றும் மரியாதையுடன் போற்றப்படுபவர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.