மும்பை:
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்திப்போம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை ஆளுநர் அலுவலகம் சென்ற தலைவர்கள், அங்கு ஆளுநர் அலுவலக அதிகாரியிடம், தங்களது கட்சி ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை அளித்தனர். தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில், பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜகவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், தங்களுக்கு அனுமதி வழங்கினால், ‘நாங்கள் 10 நிமிடத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்’ என சிவசேனா எம்.பி. சவால் விடுத்துள்ளார்.
‘அஜித் பவார் கொடுத்த போலி ஆவணங்கள் அடிப்படையில் கவர்னர், பாஜக ஆட்சியை அனுமதித்துவிட்டார்’ என குற்றம் சாட்டிய சஞ்சய் ரவூத், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 30 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளார் ஆளுநர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடம் 165 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நாங்கள் 10 நிமிடத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றும், சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் ஆகியவை அந்தந்த எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துக்களை சபையில் பெரும்பான்மையாக நிரூபிக்க வேண்டும் என்று சஞ்சய் ரவுத் கூறினார்.
மேலும், மாநிலத்தில் அரசாங்கம் அமைப்பதற்கான தங்கள் தரப்பை முன்வைக்க தனது கட்சி மற்றும் என்சிபி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை இன்று சந்திப்பார்கள் என்றும், தற்போதைய நிலையில், ஹோட்டல் லாபிகளில் கட்சிகள் தங்கள் பலத்தை சோதிக்கின்றன, நாங்கள் “உச்சநீதிமன்றம் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும், . “பெரும்பான்மை இல்லாமல்” மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்காக பாஜக “சம்பலின் டக்காய்ட்ஸ்” போல செயல்பட்டதாக ரவுத் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், இன்று காலை காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், ஆளுநர் மாளிகை சென்று, அங்கிருந்த அதிகாரியிடம், தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை கடிதங்களை அளித்துள்ளனர்.
அந்த கடிதத்தில் தங்களுக்கு 165எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்பதை தெரிவித்து, தங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த கடிதத்தில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சித் தலைவர்கள் கையொப்பமிட்டு உள்ளனர்.