மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த மாநில ஆளுநர் பகத் கோஷ்யாரியின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மகாராவில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் கடந்த ஒரு மாதமாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வந்தது.

மராட்டியத்தில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பாக காலை ஆளுநரை சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில், அடுத்த நாள் அதிகாலையிலேயே, அங்கு  குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்பட்டு, மாநில முதல்வராக பாஜகவை சேர்ந்த பட்னாவிஸ், துணைமுதல்வராக என்சிபி-ஐச் சேர்ந்த அஜித்பவாருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநரின் இந்த திடீர் மற்றும் அவசர நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கிலும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிலும் ஆளுநரின் நடவடிக்கை சரியானது அல்ல என்று குற்றம் சாட்டும் வகையில் அமைந்திருந்தது.

இந்த நிலையில்,  மராட்டிய மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மாற்றப்பட உள்ளதாக  வெளியாகியுள்ளது. மாநிலத்தின் புதிய ஆளுநராக, தற்போது ராஜஸ்தான் ஆளுநராக உள்ள கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.