மும்பை:
நிதின் கட்காரி பயணம் செய்ய ரூ. 56 லட்சத்தில் புதிய சொகுசு காரை மகாராஷ்டிரா அரசு வாங்கியுள்ளது.
நாக்பூர் தொகுதியை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கடி மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 2015ம் ஆண்டு முதல் அவர் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதிகள் மற்றும் நாக்பூருக்கு நிதின்கட்காரி பயணம் செய்ய குண்டு துளைக்காத கார் வாங்க மாநில அரசு முடிவு செய்தது. இதையடுதுது ரூ. 56 லட்சத்தில் ஃபர்டியூனர் கார் ஒன்று புதிதாக வாங்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டில் பல்கார் மாவட்டததில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலர் இறந்தனர். இந்த பகுதிக்கு முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக 7 பேர் பயணம் செய்யக் கூடிய 2 கார்கள் ரூ. 40 லட்சம் செலவில் மாநில அரசு வாங்கியது.
மாநில அரசு சார்பில் வாகனங்கள் வாங்க கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் கமிட்டி உள்ளது. இந்த குழு விவிஐபி.க்கள் பயணம் செய்ய 225 வாகனங்கள் புதிதாக வாங்க ஒப்புதல் அளித்தது. நாக்பூரில் மட்டும் குண்டு துளைக்கான கார் .ள்ளபட 22 வாகனங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.