நாண்டெட்,

முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

இம்மாநிலத்தில் இதுவரை 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 1695 பேர் மரணம் அடைந்துள்ளனர்

முன்னாள் முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவானின் வாகன ஓட்டுநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால் நாண்டெட் நகரில் உள்ள தனது இல்லத்தில் அசோக் சவான் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அசோக் சவானுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

அவர் நாண்டெட் நகரில் உள்ள ஒரு தனியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அசோக் சவான் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.