டெல்லி: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்  மற்றும் ஜார்கண்ட் மாநில 2வது கட்டத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘முழு உற்சாகத்துடன் வாக்குப்பதிவில், பங்கேற்கவும்,’ வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறும்,  மகாராஷ்டிராவில் இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் தங்கள் குரலைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சட்டமன்றத் தேர்தலில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்துக்கு அடுத்தப்படியாக அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா, இந்த மாநிலத்திலும்,  ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2வது கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்றத.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேப்போல் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே  43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ந் தேதி நடந்தது.  இன்று மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்து அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்குப்பதிவில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது  எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

மகாராஷ்டிரா வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகப் பண்டிகையின் சிறப்பை அதிகரிக்க வேண்டும். பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.

ஜார்க்கண்ட் வாக்காளர்களும் அதிக பங்கேற்புடன் வாக்குப்பதிவு சாதனை படைக்க வேண்டும். முதல்முறையாக வாக்களிப்பவர்களின் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் பலம்.

இவ்வாறு கூறியுள்ளார்.