மும்பை: பிரபல நடிகர் சுசாந்த்சிங் தற்காலை செய்துகொண்ட விவரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணையின்போது, பாலிவுட் திரையுலமே போதைப்பொருள் உபயோகப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான புகாரின்பேரில், பிரபல நடிகை தீபிகா படுகோனே இன்று என்சிபி அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதைப்பொருள் வாங்கிக்கொடுத்ததாக நடிகை ரியா சக்ரபோர்த்தி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக டேலன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் ஜெயா சஹா என்பவர் மீது புகார் எழுந்தது. அவரை வரவழைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் செல்போனில் வாட்ஸ்ஆப் குரூப் ஆரம்பித்து நடிகைகள் சிலருக்கு போதைப் பொருள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாட்ஸ்அப் குழு ஒன்றில், நடிகை நடிகை தீபிகா படுகோனே உள்பட பல நடிகர், நடிகைகள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஆய்வில், தீபிகா படுகோனே, போதைப் பொருள் வேண்டும் என்று ஜெயா சஹாவிடம் கேட்கும் சாட்டிங் விவரம் அதிகாரிகளுக்கு கிடைத்ததுள்ளது.
இதுதொடர்பாக, நடிகை தீபிகாவை விசாரிக்க முடிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் தீபிகா ஆஜராகியுள்ளார்.
அவரிடம் ஜெயா சஹாவுடன் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நடிகை தீபிகாவை தொடர்ந்து நடிகைகள் சாரா அலிகானை அதிகாரிகள் இன்று விசாரிக்க உள்ளனர்.