சென்னை

ரும் 19 ஆம் தேட் மகாராஜா திரைப்படம் ஓடிடியில் வெளி வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

பிரபல தமிழ் நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’,  ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின்  ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக  ‘மகாராஜா’ திரைப்படம் உருவானது.  நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப்,  மம்தா மோகன்தாஸ்,  நட்டி, முனிஷ்காந்த்,  சிங்கம் புலி,  பாரதிராஜா,  வினோத் சாகர்,  பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.  கடந்த 14 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இப்படம் ஜூலை 19ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Msharaja Film, OTT, July 19, release.