மகாகும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் 15,000 தூய்மைப் பணியாளர்கள் ஒரே நேரத்தில் சுத்தம் செய்து கின்னஸ் சாதனை செய்தனர்.

ஜனவரி 13ம் தேதி துவங்கிய இந்த மகாகும்பமேளா நாளை மகாசிவராத்திரியுடன் நிறைவடைகிறது.

45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் இதுவரை சுமார் 63 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு நபரும் மூலமும் சராசரியாக சுமார் 5000 ரூபாய் என மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு உலகின் மிகப்பெரிய மத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

தினமும் கோடிக்கணக்கான மக்கள் வருவதை அடுத்து நகரில் தூய்மை குறித்த பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்வு நிறைவடைய உள்ளதை அடுத்து நேற்று பிரயாக்ராஜ் நகரை ஒரே நேரத்தில் 15,000 தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்தனர்.

இது கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.