எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா.

இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்‌ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

கொரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடியில் வெளியிடத் தயாரிப்பு தரப்பு முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த இயக்குநர் ஜமீல், படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்கு தயாரிப்பாளர் மதியழகனும் விளக்கம் அளித்திருந்தார்.

இதையடுத்து இப்படம் எப்போது வெளிவரும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையடுத்து இந்த டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக படக்குழு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அந்தவகையில் தற்போது ‘மஹா’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.