பிரக்யராஜ்: மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், நெரிசல் ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.
இன்று தை அமாவாசை நாடு முழுவதும் இந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் புண்ணிய நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தை அமாவாசையானது அமவு அமாவாசை என கூறப்படுகிறது. இந்த மவுனி அமாவாசையானது, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியது. இதனால் இன்றைய அமாவாசை வெகு பிரபலமானது. இன்றைய நாளில் இறந்தவர்கள் வானுலகில் ஒன்றுகூடும் அரிய நாளாகக் கருதப்படுகிறது.
அதனால், மவுனி அமாவாசையையொட்டி, பிரக்யாராஜ் திரிவேணி சங்கம்த்தில் 10கோடி அளவிலான மக்கள் நள்ளிரவு முதலே கூடியதால் அங்கு வைக்கப்பட் டிருந்த தடுப்புகள் சேதமடைந்து பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மேலும் பலரும் விழுந்த நிலையில், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோக சம்பவம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உ.பி. முதல்வர் யோகியிடம் விசாரித்த நிலையில், தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உபி.. முதல்வர் யோகி, “பிரயாக்ராஜில் இன்று சுமார் 8-10 கோடி பக்தர்கள் உள்ளனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராட இருப்பதால், அந்த பகுதியில் தொடர்ந்து அழுத்தம் நிலவுகிறது. கட்டுக்கடங்கனா பக்தர்களின் கூட்டத்தால், நள்அகாரா மார்க்கில் உள்ள தடுப்புச் சுவர்களை கடக்க முயன்றபோது சில பக்தர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மௌனி அமாவாசை தொடங்கியதிலிருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது நிலைமை சீராக உள்ளது. பிரயாக்ராஜில் நிலைமை கட்டுக்குள் உள்ளது, ஆனால் கூட்டத்தின் அளவு அதிகமாகவே உள்ளது. பக்தர்கள் முதலில் புனித நீராட வேண்டும் என்றும், கூட்டம் குறைந்தவுடன் அகாராக்கள் புனித நீராடச் செல்வார்கள் என்றும் பல்வேறு அகாராக்களின் புனிதர்கள் பணிவுடன் கூறியுள்ளனர்.
சங்கம மூக்கு, நாக் வாசுகி மார்க் மற்றும் சங்கம மார்க் ஆகிய இடங்களில் அதிக கூட்டம் உள்ளது. பக்தர்கள் எந்த வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கும்பமேளா பகுதி முழுவதும் மலைத்தொடர்கள் அமைக்கப்பட்டுள்ளன, பக்தர்கள் சங்கம முகப்பை நோக்கி மட்டும் செல்ல வேண்டிய அவசியமில்லை. பக்தர்கள் தங்களுக்கு அருகிலுள்ள மலைத்தொடர்களில் புனித நீராட வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் இதுவரை நான்கு முறை தன்னிடம் தொலைபேசி மூலம் நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளார், அவரும் நிலைமையை கண்காணித்து வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோரும் நிலைமை குறித்து தொடர்ந்து அறிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலல் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சையை நாங்கள் உறுதி செய்கிறோம். பிரயாக்ராஜ் பிராந்தியத்தின் பல்வேறு நிலையங்களில் இருந்து பக்தர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல ரயில்வே சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு கூறினார்.