மும்பை: அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலகப் பணியின்போது டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது மராட்டிய மாநில அரசு.

அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; புதிய ஆடை விதியின்படி, கண்ணியமான ஆடைகளை அணிந்தே அலுவலகம் வர வேண்டும். மோசமான செருப்புகளை அணிதல் கூடாது.

வெள்ளியன்று கதர் ஆடை அணிய வேண்டும். அரசு ஊழியர்களின் ஆடை தொடர்பாக, மக்கள் மத்தியில் ஒரு மோசமான பிம்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதைப் போக்க வேண்டியுள்ளது.

எனவே, அரசு ஊழியர்கள் பணியின்போது சுத்தமான, அதேசமயம் சரியான உடைகளை அணிய வேண்டும். பெண் ஊழியர்கள் புடவைகள், சல்வார், சுடிதார், குர்தா, பேண்ட் – சட்டைகளை துப்பாட்டாக்களுடன் அணியலாம்.

அதேசமயம், ஆண்கள் சட்டை – பேண்ட் அணியலாம். டிசைன் டிசைனான உடைகள், எம்ப்ராய்டரி படங்கள், ஜீன்ஸ், டி-ஷர்ட் அணியக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.