நியூயார்க்: அமெரிக்காவில் இன்று 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்கலூன் நகரத்திற்கு வடக்கில் 162 கி.மீ. தொலைவில் இன்று பிற்பகல் 12.29 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 61 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமான கடற்பரப்பில் கீழ் 41.3 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் பாதிப்பு கனடாவிலும் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.