வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அந்நாட்டின் நெவாடா மினா பகுதியில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது.

நெவாடா மினா பகுதியின் தென்கிழக்கே 34 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் காரணமாக, மேற்கு நெவாடா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது

கலிபோர்னியாவின் சியரா மலைப்பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.