சென்னை:
டந்த ஜூலை 22ந்தேதி  அந்தமானுக்கு சென்ற  இந்திய விமானப்படை விமானம் திடீரென மாயமானது. அது குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை. அதையடுத்து,  விமானத்தில் பயணம் செய்த 29 பேரும் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து ஜூலை ந்தேதி காலை 8.30 மணிக்கு 29 பேருடன் அந்தமான் நோக்கி சென்ற விமானம் மாய மானது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘AN-32’ ரக விமானம் அந்தமான் – நிக்கோபர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளையர் நோக்கி  சென்றது. புறப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சென்னை முதல் அந்தமான் வரை விமானத்தை தேடும் பணி  300 கடல் மைல் தொலைவு தூரம் நடைபெற்றது. கடலில் எதுவும் கிடைக்காததால், தேடும் பணி  விரிவுபடுத்தப்பட்டது. செயற்கை கோள் மூலமாகவும் தேடப்பட்டது.
கடந்த 2 மாத காலமாக வங்கக்கடல் பகுதியில் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்றது. ஆனால், அந்த விமானத்தையோ, அதன் உதிரி பாகங்களையோ  கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விமானத்தில் சென்ற 29 பேரும் உயிரிழந்துவிட்டனர் என  கருதுவதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதுபற்றிய அறிவிப்பு, விமானத்தில் பயணம் செய்த  29 பேரின் குடும்பங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.