பெங்களூரு, 

க்களை திசை திருப்ப பா.ஜனதா அரசியல் நாடகமாடுவதாகவும், மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிட எடியூரப்பா யார்? என்றும் முதல்–மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவுக்கும், கோவாவுக்கும் இடையே மகதாயி நதி நீர் பிரச்சினை வெகு காலமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் காவிரி பிரச்சினை போன்று கர்நாடகாவுக்கு மகதாயி நதி நீர் பிரச்சினை உள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா, மகதாயி நதி நிர் பிரச்சினை குறித்து பேசியதாகவும், இந்த கூட்டத்தில்  பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர், கர்நாடக பா.ஜனதா முன்னணி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பிரகலாத்ஜோஷி, பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், அனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து,  கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மகதாயி நதிநீர் பிரச்சினை  குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாகவுக்கு கடிதம் எழுதாமல், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இது கர்நாடகாவில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, மகதாயி பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிட எடியூரப்பா யார் என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள   மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்க கர்நாடக காங்கிரஸ் அரசு தேவையான நடடிவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்ப தால், தற்போது மகதாயி பிரச்சினையை பாஜக கையிலெடுத்து உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இந்த பிரச்சினை குறித்து கோவா முதல்வர் கர்நாடக அரசுக்கு எந்தவொரு கடிதமும் எழுதவில்லை என்ற அவர், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், மகதாயி நதியில் இருந்து மல்லபிரபா நதிக்கு 7.56 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை திறந்து விடுவோம் என்று எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிகிறது என்றார்.

தற்போதுவரை மகதாயி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால்,  கோர்ட்டுக்கு வெளியே பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதே கர்நாடக அரசின் விருப்பம்.

இப்படிப்பட்டசூழலில், கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர், மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து கோர்ட்டில் பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யாமல்,   மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா அறிவிப்பு வெளியிடுவது எப்படி என்றும், அதற்கு அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று காட்டமாக கேட்டார்.

மகதாயி  பிரச்சினைக்கு கோர்ட்டுக்கு வெளியே, பேச்சு வார்த்தை மூலம் பா.ஜனதாவினர் தீர்வுகண்டால் அதனை தான் வரவேற்பதாக கூறிய சித்தராமையா, மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து பாஜ மாநாட்டில்  அறிவிப்பு வெளியிடுவேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளதை   மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறினார்.

சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு எடியூரப்பா,. மக்களை திசை திருப்ப முயற்சித்து வருகிறார் என்றும், பாரதியஜனதா அரசியல் ஆதாயம் தேடுகிறது என்ற முதல்வர்,  மகதாயி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று எடியூரப்பா நினைத்தால், அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச வேண்டும் என்று கூறினார்.

மேலும், இந்த பிரச்சினை குறித்து 3 மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

கோவா முதல்வருடன் நான் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறிய சித்தராமையா இது குறித்து கோவா மற்றும் மராட்டிய மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாவும் நினைவு கூர்ந்தார்.

கோவாவில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததும், அந்த மாநில பா.ஜனதா தலைவர்களுடன் பேசுவதாக எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் கூறி இருந்தார்கள். ஆனால், அவர்கள் இதுவரை எந்தவித முயற்சியில் எடுக்காமல், தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில்கொண்டு  கோவா முதல்வருடன்  பேச்சுவார்த்தை நடத்துவது போல நாடகமாடுகிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.