மதுரை: மதுரையில் வருகிற 22-ந்தேதி நடைபெறுவதையொட்டி, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகன் வீடு கண்காட்சி இன்று மேதாளம் பூஜை புனஸ்காரத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பூஜை செய்து கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

ஜுன் 22-ந்தேதி மதுரையில் உள்ள தனியார் இடத்தில், பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு, மதுரை பாண்டி கோவில் வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் நடைபெறு கிறது. இந்த மாநாட்டிற்கு உ.பி. முதல்வர், ஆந்திரா துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த மாநாட்டை ஒட்டி, மாநாட்டு வளாகத்தில், அறுபடை முருகனின் மாதிரி கண்காட்சி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், அறுபடை முருகன் கோவிலைப்போன்ற, கோவில்களின் கோபுரங்களுடன் முகப்பு தோற்றமும், உள்ளே சென்றால் பிரகாரமும், தனிஅறை மூலவர் சன்னதியாகவும் தத்ரூபமாக வடிவமைத்து அங்கு வழிபாடு செய்யப்பட்ட வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட் டு உள்ளன.
இந்த அறுபடை முருகண் கண்காட்சி இன்று தொடங்கியது. புதுக்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து அறுபடை வீடுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலைகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது கண்காட்சியை காண திரண்டு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த கண்காட்சியானது மாநாடு நடைபெறும் 22-ந்தேதி வரை இருக்கும் என்றும், இதனை காண வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளதாகவும் முருக பக்தர்கள் மாநாட்டு குழுவினர் தெரிவித்தனர்.
முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், ஆன்மி சொற்பொழிவு என பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பக்தர்களின் வசதிக்காக ஓய்வறை, கழிவறை, வாகனம் நிறுத்தும் இடம், உணவு என தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
இன்று கண்காட்சி தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் வந்து பார்வையிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.