மதுரை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார்.  அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இறுதி இரா.சுப்புராம் இன்று அதிகாலை வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிச்சடங்கு  இன்று மாலை மதுரை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டு உள்ளது.

.இந்த நிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர்  ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையாரான திரு.இரா.சுப்புராம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் திரு.சு.வெங்கடேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.