மதுரை:
தமிழகத்தில் 2 லட்சம் தடுப்பூசியை செலுத்திய முதல் மையம் என்ற சாதனையை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் இலவச தடுப்பூசி மையம் படைத்துள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் இலவச தடுப்பூசி மையம் ஒரு வருடமாக தொடர்ந்து இயங்கி 2 இலட்சம் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் தடுப்பூசியை செலுத்திய முதல் மையம் இதுவே. பேரிடர் தடுப்பிலும் முதலிடம் வகிக்க காரணமான அனைவருக்கும் வாழ்த்துகள். என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel