மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டுத் தலைநகரம் மேட்ரிட்டில், கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எங்கும் பனி மூடி காணப்படுகிறது.

தெருக்கள், முக்கிய சாலைகள், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் என, எங்கும் மிகக் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. எல்லாம் பனியால் மூடப்பட்டுள்ளன.

அங்கு பனிப்பொழிவு தாளாமல் பல மரங்களை முறிந்து விழுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள், பனிப்பொழிவுக்கேற்ற உடைகள் மற்றும் காலணிகளை அணிந்து, வெளியில் நடமாடுகின்றனர். பலரும் பனிச்சருக்கு கருவிகளைப் பயன்படுத்தி, வெளியில் சென்று வருவதோடு, ஸ்கேட்டிங் முறையில் இடம்விட்டு இடம் நகர்கின்றனர்.

விமான நிலையங்களில் கடும் பனிப்பொழிவு இருப்பதால், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி உணவகங்களின் மேசை-நாற்காலிகள் கடும் பனிப்பொழிவினால் மூடப்பட்டுள்ளன. இது கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத கடுமையான ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.